X

‘டோனி’ படத்தின் மற்றொரு நடிகர் தற்கொலை!

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ், டோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் எம்.எஸ். டோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சுஷாந்த் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் பாலிவுட்டில் மிகப்பெரிய புயலை கிளப்பியது. அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது காதலிதான் தற்கொலைக்கு துண்டினார் என குற்றச்சாட்டு எழுந்தது. அவரது மரணம் தற்கொலையா? தூண்டப்பட்டதா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதே படத்தில் நடித்திருந்த மற்றொரு நடிகரான சந்தீப் நஹார், இன்று மும்பை கொரேகானில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். டோனி படத்தில் இவர் சுஷாந்திற்கு நண்பனாக நடித்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன் சந்தீப் நஹார், வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனை அடைந்ததாகவும், சிறு விசயத்திற்குக்கூட மனைவி அடிக்கடி சண்டையிடுவார் என்றும், இதனால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவிற்கு மோசமான முடிவை எடுக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.