X

டோனி எங்கள் அணிக்காக விளையாடினால்…! – சி.எஸ்.கே அணியை சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசி நேரத்தில் களம் இறங்கி வரும் எம்எஸ் டோனி அபாரமாக விளையாடி வருகிறார். எம்.எஸ். டோனி நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவாரா? என ரசிகர்கள் ஏங்கும் நிலையில், குறைந்தபட்சம் 10 பந்துகளை சந்திக்கும் நிலையில்தான் களம் இறங்குகிறார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் எல்எஸ்ஜி அணிக்கெதிராக கடைசியில் இறங்கி அசத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கடைசி ஓவரில் 4 பந்துகளை சந்தித்த அவர், முதல் மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக சிக்ஸ் விளாசினார்.
நேற்று எல்எஸ்ஜி அணிக்கெதிராக கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். மொத்தமாக 9 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் குவித்தார்.

ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 90 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அப்போது டோனி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் களம் இறங்கவில்லை. இந்த நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு, டோனியை முன்வரிசையில் களம் இறக்குவதில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க செய்தில் “எம்.எஸ். டோனி எங்கள் அணிக்காக விளையாடினால் அவர் போன்ற வீரரை நாங்கள் 8-வது இடத்திற்கு முன்னதாக களம் இறக்குவோம். இளம் வீரர் போன்று தோன்றும் அவர், சிஎஸ்கே அணியில் அவரின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பெறவில்லை” எனத் தெரிவித்துள்ளது.