X

டோனி இந்திய அணியின் ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி – விராட் கோலி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17-ல் தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

20 ஓவர் உலக கோப்பை  தொடரில் இந்தியாவின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.டோனி  இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

2007-ம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் எம்.எஸ்.டோனி.

இந்நிலையில், எம்.எஸ்.டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் ஆலோசகராக இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும்  என தெரிவித்துள்ளார்.