இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவரது தலைமையில் இந்தியா டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. தற்போது விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக உள்ளார்.
எம்எஸ் டோனியை போல் விராட் கோலியால் கேப்டனில் சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
இந்நிலையில் எம்எஸ் டோனியை போன்று விராட் கோலியால் போட்டியை சிறப்பாக கணிக்க இயலாது, என்றுஅவரது சிறுவயது பயிற்சியாளரான கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஷவ் பானர்ஜி கூறுகையில் ‘‘சென்று கொண்டிருக்கும் போட்டியை சரியாக மதிப்பிடுவது, தந்திர அணுகுமுறையில் டோனியை போன்று வேறு யாரும் இல்லை. விராட் கோலியாலும் அது செய்ய இயலாது. ஆகவே, அவர் ஏதாவது ஆலோசனை பெற விரும்பினால், டோனியும் பெற முடியும். டோனி இந்திய அணியில் இடம் பெறாவிட்டால், அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் கூட இல்லை’’ என்றார்.