X

டோனியை போலவே இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா வாய்ப்புகள் வழங்குகிறார் – சுரேஷ் ரெய்னா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது ரசிகர்களை மத்தியில் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் டோனி போலவே இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்புகளை அளிக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

டோனியை போலவே இளம் வீரர்கள் பலருக்கும் ரோகித் சர்மா வாய்ப்புகளை அளிக்கிறார். டோனி தலைமையில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கங்குலி தனது அணிக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார். டோனி தன்னை முன் நிறுத்தி அணியை வழி நடத்தினார். ரோகித் நன்றாக கேப்டன்சி செய்கிறார். அவர் சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.