X

டோனியை சந்தித்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் – வைரலாகும் புகைப்படம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்தது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை வந்த டோனியை ஆப்கானிஸ்தான் வீரர் சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை ரஷித்கான் அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் உங்களை சந்திப்பதில் எப்போதுமே மகிழ்ச்சி என தலைப்பிட்டுருந்தார்.

Tags: tamil cinema