டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடாது – கபில் தேவ் கருத்து

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பரான பணியாற்றுகிறார். சிறப்பான பேட்டிங் திறமையை கொண்டுள்ள ரிஷப் பந்த் டோனிக்கு சரியான மாற்று வீரர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் எம்எஸ் டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்தை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனியுடன் எந்தவொரு வீரரையும் நீங்கள் ஒப்பிட முடியாது. டோனியின் உச்சத்தை ஒருபோதும் இன்னொருவரால் நிரப்ப முடியாது. ரிஷப் பந்த் திறமை கொண்ட கிரிக்கெட்டர். டோனியுடன் அவரை ஒப்பிட்டு நாம் அவருக்கு நெருக்கடியை உண்டாக்கக் கூடாது. அவருடை நேரம் கண்டிப்பாக வந்தே தீரும்’’ என்றார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: sports news