Tamilவிளையாட்டு

டோனியின் 200 வது போட்டி – நினைவு பரிசு வழங்கிய சீனிவாசன்

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்யுயுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக டோனிக்கு 200-வது போட்டியாகும்.

2010, 2011, 2018 மற்றும் 2021 என 4 முறை டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே. 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. 199 போட்டிகளில் டோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் களமிறங்கிய எம்.எஸ்.டோனிக்கு சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார். அணி வீரர்களும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.