X

டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாது 2 சம்பவங்கள்!

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இந்தியாவுக்கு மூன்று ஐசிசி டிராபியை வாங்கிக் கொடுத்தவர். இவரது தலைமையில் இந்திய அணி, 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.

எம்எஸ் டோனிக்கு இந்திய அணியில் ஏராளமான சிறந்த சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள்தான் மிகமிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘நான் இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களை சொல்லியாக வேண்டும். தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா திரும்பியபோது, மும்பையில் உள்ள மரைன் டிரைவில் நாங்கள் திறந்த வெளி பேருந்தில் உலா வந்தோம். அப்போது அந்த பகுதியே ஸ்தம்பித்தது. காரில் இருந்து பொதுமக்கள் காரை விட்டு வெளியில் இறங்கி நின்றனர்.

ஒவ்வொரு பொதுமக்களின் முகத்திலும் சிரிப்பை பார்த்த நான், அதை மிகவும் சிறந்த தருணமாக உணர்ந்தேன். ஏனென்றால், கூட்டத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள் அவர்களுடைய விமான பயணத்தை தவற விட்டிருக்கலாம், முக்கியமான வேலைகள் கூட தடைபட்டிருக்கலாம். நாங்கள் பெற்ற வரவேற்பு மரைன் டிரைவின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை குறையாமல் அப்படியே குறையாமல் இருந்து.

2-வது நிகழ்வு 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின்போது நடந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 15-20 ரன்கள் தேவையிருக்கும்போது, அனைத்து ரசிகர்களுமம் வந்தே மாதரம் என கோசம் எழுப்பினர்.

இந்த இரண்டு தருணங்கள் மீண்டும் பிரதிபலிப்பது மிகவும் கடினம். இரண்டு எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான தருணங்கள்’’ என்றார்.

Tags: sports news