X

டோக்கியோ பாராலிம்பிக் – ஈட்டி எறிதலில் 2 பதக்கங்கள் வெற இந்திய வீரர்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இலங்கை வீரர் ஹெராத் தங்கப் பதக்கத்தை வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.