X

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் வென்ற ரஷ்ய நீச்சல் வீரருக்கு தடை!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 56-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு ரஷிய மக்களில் சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஷிய அதிபர்
புதினையும், உக்ரைன் மீதான படையெடுப்பையும் ஆதரவையும் தெரிவித்து கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ரஷியாவை சேர்ந்த நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவ் பேரணியில்
பங்கேற்றார்.

இதையடுத்து வரை 9 மாதங்களுக்கு தடை விதித்து FINA எனப்படும் சர்வதேச நீச்சல் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் ரைலோவ் பிற பதக்கங்கள் வென்ற
வீரர்களுடன் மேடையில் ‘Z’ என்ற எழுத்தை கொண்ட ஆடையை அணிந்திருந்தார். இது ரஷிய படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் எழுத்து என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஃபினா அமைப்பு, ரைலோவை தொடர்ந்து பிற ரஷிய மற்றும் பெலாரஸ் வீரர்களை அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து தடை செய்யவுள்ளோம். தற்போது ரஷியா மற்றும்
பெலாரஸ் ஆகியவை ஹங்கேரியில் நடைபெறவுள்ள சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள்
அழைக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளது.வ்