டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய டென்னிஸ், டேபிள் டென்னிஸ் வீராங்கனைகளின் விவரம்
சானியா மிர்சா- அங்கிதா ரெய்னா ஜோடி
ஜூலை 2021 சானியா மிர்சா- அங்கிதா ரெய்னா இந்திய ஜோடியாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்பார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சானியா மிர்சா 4-வது முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கிறார். அங்கிதா ரெய்னா முதல்முறையாக பங்கேற்கிறார்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார். ஆனால் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
புகழ்பெற்ற கிராண்ட்ஸ் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியா, பிரெஞ்ச், விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடியுள்ளார். அமெரிக்க ஓபனில் 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக 4-வது சுற்று வரை முன்னேறியுள்ளார். 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில முதல் சுற்றோடு வெளியேறியுள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 2016-ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபனையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் 2009-ல் ஆஸ்திரேலிய ஓபனையும், 2012-ல் பிரெஞ்ச் ஓபனையும், 2014-ல் அடிமரிக்க ஓபனையும் வென்றுள்ளார். 2016 ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். ஆசிய போட்டி, காமன்வெல்த் போட்டி, ஆஃப்ரோ-ஆசிய போட்டியில் தங்க பததக்கம் வென்றுள்ளார்.
அங்கிதா ரெய்னா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1993-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி பிறந்தார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் இதுவரை தகுதி சுற்றை தாண்டி முதன்மை சுற்றுக்கு முன்னேறவில்லை. 2016 தெற்கு ஆசிய போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கமும், கலப்பு இரட்டைய பிரிவில் தங்க பதக்கமும் வென்றுள்ளார்.
டேபிள் டென்னிஸ்
மணிகா பத்ரா
மணிகா பத்ரா டெல்லியில் 1995-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி பிறந்தார். 2018 ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். 2018 காமல்வெல்த் போட்டியில் ஒன்றையர் மற்றும் அணிகள் பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். மிக்ஸ்டு டபுள்ஸ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
தெற்காசிய போட்டியில் 2016-ம் ஆண்டு பெண்கள் இரட்டையர்கள், பெண்கள் அணிகள், மிக்ஸ்டு டபுள்ஸ் பிரிவில் தங்கமும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.
இவர் மத்திய அரசின் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றுள்ளார். 2021 மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் குவாலிபிகேசன் தொடர் சிறப்பாக விளையாடியதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
சுதிர்தா முகர்ஜி
1995-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தா நைஹாதியில் பிறந்தார். 2018 பெண்கள் அணி பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இரண்டு முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
2016-ம் ஆண்டு வயது தொடர்பாக போலி சான்றிதழ் வழங்கியதாக இரண்டு ஆண்டுகள் தடைபெற்றார்.
2021 மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் குவாலிபிகேசன் தொடர் சிறப்பாக விளையாடியதன் (இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ராவை 4-2 என வீழ்த்தினார்.) மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.