டேவிட் வார்னர் தேர்வு செய்த சிறந்த மூன்று பேட்ஸ்மேன்கள்
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள்ளேயே இருக்கும் வீரர்கள் லைவ் சாட் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் நியூசிலாந்து அணி கேப்டனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேனும் ஆன கேன் வில்லியம்சனுடன் இன்ஸ்டாகிராம் லைவ் செசன் மூலம் கருத்துக்கனை பகிர்ந்து கொண்டார்.
அப்போது டேவிட் வார்னர் ‘‘உங்களை (கேன் வில்லியம்சன்), ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகியோரை தலைசிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்வேன்’’ என்றார்.
அதேபோல் கேன் வில்லியம்சன் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போது உணர்ச்சிவசப்பட்டது குறித்து கூறுகையில் ‘‘அது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய நேரம். அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டது சரியானதுதான்’’ என்றார்.