Tamilவிளையாட்டு

டெஸ்ட் போட்டியில் ரோகித்தை தொடக்க வீரராக இறக்க கூடாது – நயன் மோங்கியா கருத்து

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருபவர் ரோகித் சர்மா. ஆனால், மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கிய ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் நிலையான இடம் கிடைக்கவில்லை. ரகானே, ஹனுமா விஹாரி ஆகியோர் சிறப்பாக விளையாடுவதால், ரோகித் சர்மாவை தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேஎல் ராகுல் மோசமாக விளையாடியதால், அவர் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா தொடரில் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாதான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் என்பது சிறப்பு வாய்ந்த வேலை. ரோகித் சர்மாவை அந்த இடத்தில் களம் இறக்குவது சரியாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நயன் மோங்கியா கூறுகையில் ‘‘தொடக்க பேட்ஸ்மேன் என்பது விக்கெட் கீப்பர் பணி போன்று சிறப்புமிக்க வேலை. ரோகித் சர்மா ஒயிட்-பால் மேட்சியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயம்.

மாறாக ஒயிட்-பந்தில் எப்படி விளையாடுகிறாரோ, அதைபோல் டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்ற வகையில் தனது ஆட்டத்தை மாற்றுவதை விட, ரோகித் சர்மா அவரது ஆட்டதிறன் மீது உறுதியாக இருக்க வேண்டும். ஒருவேளை டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவகையில் தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டால், அது ஒயிட்-பால் போட்டி ஆட்டத்தை பாதிக்கலாம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *