X

டெஸ்ட் போட்டியில் சேவாக்கை வீழ்த்துவது சுலபம், டிராவிட்டுக்கு பந்து வீசுவது கடினம் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலும் சேவாக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடங்க வீரர் சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சுலபம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரானா நவீத் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

(டெஸ்ட்டில்) சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சுலபம். ஆனால், ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம். என்றார். 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 586 ரன்கள் குவித்துள்ளார்.

251 ஒருநாள் போட்டிகளில் ஆடிய சேவாக் 8 ஆயிரத்து 273 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 19 டி20 கிரிக்கெட்டில் விளையாடிய சேவாக் 394 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil sports