Tamilவிளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – 4வது இடத்திற்கு முன்னேறியது இலங்கை

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், வங்காளதேசம், இலங்கை டெஸ்ட் தொடருக்கு பிறகான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் நேற்று  வெளியானது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இலங்கை அணி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 55 சதவீத வெற்றியுடன் இந்தப் பட்டியலில் இலங்கை 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் 75 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 71.43 சதவீதத்துடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்திலும் உள்ளது. 58.33 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது.