டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் நீடிக்கிறார். சிட்னி டெஸ்டில் சதம், அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2-வது இடத்தில் இருந்த விராட் கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடாத காரணத்தினால் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த புஜாரா 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ரகானே ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். டேவிட் வார்னர் 3 இடங்கள் சரிந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
லாபஸ்சேன் 4-வது இடத்திலும், பாபர் அசாம் 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.