Tamilவிளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேற்றம்

டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார்.

மேலும் பேட் கம்மின்ஸ் 3-வது இடத்தில உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம், 2 வது இடத்தில் அஸ்வின் உள்ளனர். அக்சர் படேல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும் ரோகித் சர்மா 7 -வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர்.