Tamilவிளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்தை பிடித்த ஜோரூட்

டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங், பந்து வீச்சு தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டது. டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோரூட் 897 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 892 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கினார்.

டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணியில் அப்ரிடி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து வீரர் ஜேமிசன் 3 இடம் பின் தங்கி 6-வது இடத்தில் உள்ளார். அந்த அணியின் மற்றொரு வீரரான டிரெண்ட் போல்ட் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும் இந்திய அணி வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் தொடர்கிறார்கள். இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.