X

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. 30 விக்கெட்டுகளில் 28 விகெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்த போட்டி இரண்டு நட்களிலேயே முடிவடைந்தது.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

2-வது இன்னிங்சில் ஜாஃப்ரா ஆர்சரை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட் எனக் மைல்கல்லை எட்டினார்.