X

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி!

விராட்-கோலி 2011, ஜூன் 20-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக களமிறங்கினார்.

அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்சில் 15 ரன்களுக்கும் அவுட்டானார் விராட் கோலி

தற்போது நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-வது நாளில் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் விராட் கோலி கடந்து வந்த பாதை:

92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 61 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

மொத்தம் 7,534 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.31 ஆக இருக்கிறது.

2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது டெஸ்டில் முதல் அரை சதம் அடித்தார்.

2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

இந்த 10 ஆண்டுகளில் 27 சதங்களை விளாசியுள்ளார். அதில் 14 சதங்கள் இந்தியாவுக்கு வெளியே அடித்தவை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை இரட்டை சதங்களும், 25 அரை சதங்களும் விளாசியுள்ளார்.

2019-ம் ஆண்டில் புனேவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 254 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாகும்.

2016-ம் ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் 1,215 ரன்களை குவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் இந்திய அணியில் அதிகபட்ச சராசரி வைத்திருக்கும் பேட்ஸ்மேன் இவர் மட்டுமே.

2018-ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் பெற்றார்.

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக 2017, 2018, 2019 என தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக 2020-ம் ஆண்டு ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு “சர் கேரிபீல்டு சோபர்ஸ்” விருது வழங்கி கவுரவித்தது ஐசிசி.