டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த நாதன் லயன்

ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் படைத்துள்ளார்.

தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தவர்கள் பட்டியலில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம் பிடித்த நிலையில் 6-வது வீரராக லாதன் லயன் பந்து வீச்சாளராக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:-

159 – அலஸ்டர் குக்

153 – ஆலன் பார்டர்

107 – மார்க் வாக்

106 – சுனில் கவாஸ்கர்

101 – பிரண்டன் மெக்கல்லம்

100* – நாதன் லயன்

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports