டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை சமன் செய்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரு ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும் எடுத்தன.

இதனால் 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து  3ம் நாள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (18 முறை), பிரையன் லாரா (18), ரிக்கி பாண்டிங் (17), அலெஸ்டர் குக் : 17 முறை

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports