X

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டெயின்

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆவார். 36 வயதான இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 வரை விளையாடி உள்ளார். 93 டெஸ்ட் போட்டியில் விளையாடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இவர் 2014 -ம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இவர் தற்போது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் 262 வாரங்கள் முதல் இடத்தை அலங்கரித்த பெருமை இவருக்கு உண்டு. மேலும் 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இடம் பிடித்து ஸ்டெயின் காயம் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: sports news