டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் அஸ்வினும் ஒருவர் – பும்ரா புகழ்ச்சி

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் அவர் சிறப்பாக பந்து வீசவில்லை, வெற்றியை தேடிக்கொடுக்கவில்லை என்ற விமர்சனம் சிலரால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அதையெல்லாம் கவனித்தில் எடுத்துக் கொள்ளாமல் அஸ்வின் பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி ஆகியோரால் தொடக்க ஜோடியை பிரிக்க முடியவில்லை. அஸ்வின்தான் தொடக்க ஜோடியை பிரித்தார். டாம் லாதம் 104 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்ததார்.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என பும்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

அஸ்வின் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவருடைய சாதனையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது அவரைப் பற்றி பேசும். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். 400 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தியுள்ளார். அது வாய்ப்புகள் மற்றும் தற்செயலாக வரவில்லை’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools