டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட் செய்து இருந்தனர்.
இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக இந்திய பிரபலங்களான கங்கனா ரனாவத், அக்ஷய் குமார், விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட பலர் டுவிட் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்திய பிரபலங்களின் இந்த நிலைப்பாட்டை நடிகை டாப்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு டுவிட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நீங்கள்தான் உங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு பாடம் எடுக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார். டாப்சியின் இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.