டெல்லி வன்முறை – பாராளுமன்றத்தில் அமளி

டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலிறுத்தி வருகிறது.

இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிரொலித்தது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக கூறி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் நேற்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் பாராளுமன்றத்தின் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news