டெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதக்கூட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 238 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் இஸ்லாமிய மத கூட்டத்தில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேர் உள்பட 21 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools