டெல்லியில் உள்ள மாயாபுரி பகுதியில் அமைத்துள்ள தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடினர். பின்னர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீ விபத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மே மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் டெல்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.