X

டெல்லி மாநிலம் முழுவதும் இலவச வைபை சேவை!

டெல்லி மாநிலம் முழுவதும் வருகிற 16-ந் தேதி முதல் இணையதள வசதி பெறுவதற்காக இலவச ‘வைபை’ வசதி திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

முதற்கட்டமாக 100 இடங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். இந்த வசதி பஸ் நிலையங்கள் இருக்கும் 4 ஆயிரம் இடங்களிலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் 100 இடங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் இதர முக்கிய பகுதிகள் உள்பட 7 ஆயிரம் இடங்களிலும் செயல்படுத்தப்படும். 6 மாதங்களில் இந்த வசதிகள் அனைத்து பகுதிகளிலும் செய்து முடிக்கப்படும். இந்த திட்டத்திற்காக ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. தனிநபர் ஒருநாளைக்கு 1.5 ஜிபி வரையில் உபயோகிக்கலாம். ஒரு வைபை இணைப்பை 150 முதல் 200 பேர் வரை பயன்படுத்தலாம். 100 மீட்டர் சுற்றளவில் இந்த இணைப்பை பெற முடியும்.