Tamilசெய்திகள்

டெல்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை

நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மவுன அஞ்சலி செலுத்தினார்.

இதை தொடர்ந்து போர் நினைவுச் சின்னத்தில் வருகை பதிவேட்டிலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.