Tamilசெய்திகள்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ பரிசோதனை

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ சோதனை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், ” சிபிஐயை வரவேற்கிறோம். சிபிஐக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறிவைக்கப்படுகிறார். இதற்கு முன்பும் ரெய்டுகள் நடந்தன. ஆனாலும் எதுவும் கிடைக்கவில்லை. இப்போதும் எதுவும் கிடைக்க போவதில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், “சிபிஐ வந்துவிட்டது. நாங்கள் நேர்மையானவர்கள். லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குகிறோம். இது துரதிர்ஷ்டவசமானது. இந்த நாட்டில், யார் சரியாக வேலையைச் செய்தாலும் இப்படித்தான் தொந்தரவுகள் வருகின்றன. அதனால்தான் நம் நாடு இன்னும் நம்பர் 1-ஆக இல்லை” என்றார்.