டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த இடதுசாரி குழு, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ABVP) ஆகிய இரண்டு அணிகள் போட்டியிட்ட ஒருங்கிணைந்த இடதுசாரி குழு ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் (AISA) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த அணி சார்பில் தனஞ்ஜெய் போட்டியிட்டார். ஏபிவிபி சார்பில் உமேஷ் சி அஜ்மீரா போட்டியிட்டார்.
இதில் தனஞ்ஜெயா 2598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தனஞ்ஜெயா பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1996-97-ல் பட்டி லால் பைர்வா என்பவர் மாணவர்கள் சங்கம் தேர்தல் வெற்றி பெற்றிருந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தார். அதன்பின் சுமார் 27 வருடங்கள் கழித்து தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஜேஎன்யு மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற தனஞ்ஜெய் கூறுகையில் “இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் வெறுப்பு அரசியல், வன்முறையை நிராகரித்துள்ளனர். மாணவர்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் மாணவர்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்” என்றார்.