டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றிப் பெற்றுள்ளது.
ஆம் ஆத்மிக்கு மொத்தமுள்ள 62 எம்எல்ஏக்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் 4 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே, பாஜக பேரம் பேசி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், பெரும்பான்மையை அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபித்துள்ளார்.