X

டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. மெதுவாக பந்து வீசியதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லி அணி செய்யும் முதல் தவறு என்பதால் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மெதுவாக பந்துவீசியதற்காக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலிக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.