பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் கடந்த 2007-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் ‘சாவரியா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான அவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவை திருமணம் செய்தார்.
பின்னர் இந்த ஜோடி லண்டனில் செட்டிலாகினர். திருமணத்திற்கு பின்னரும் சோனம் கபூர் சில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனில் வசித்து வந்தாலும் அவர்களுக்கு டெல்லியில் ரூ.173 கோடியில் பிரம்மாண்ட மாளிகை இருப்பது தெரிய வந்துள்ளது.
பிருத்திவிராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த மாளிகையானது 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. சோனம் கபூர் தம்பதி இந்தியாவில் இருக்கும் போதெல்லாம் டெல்லியில் உள்ள இந்த வீட்டில் தான் அதிக நேரத்தை செலவிடுவார்களாம். இதற்காக இந்த மாளிகையில் பல்வேறு ஆடம்பர வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மாளிகையின் உட்புறத்தில் ஸ்டைலான மார்பிள் தரை, நேர்த்தியான மர தளவாடங்களால் செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் என மாளிகை அதிநவீன வசதிகளுடன் ஜொலிக்கிறது. இந்த மாளிகையில் கூடைப் பந்து மைதானமும் உள்ளது.