தலைநகர் டெல்லியில் உள்ள களிண்டி கஞ்ச் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மர பொருட்கள் சந்தை அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று அதிகாலை 5.55 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான மர பொருட்கள் எரிந்து நாசமாகின. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில், தீவிபத்து காரணமாக களிண்டி குன்ச்-பொட்டானிக்கல் கார்டன் இடையிலான மெட்ரோ ரெயில் சேவை சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது. தீவிபத்தால் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.