X

டெல்லியில் பனி மூட்டம்! – ரயில் போக்குவரத்து பாதிப்பு

வடமாநிலங்களில் வழத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.

குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பார்க்க முடியாமல் நிலை ஏற்பட்டதால் இன்று காலை டெல்லி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் ரெயில்கள் தவித்தன. அந்த அளவிற்கு பனி மூட்டம் நிலவியது. அதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் புறப்பட முடியவில்லை.

பனி மூட்டத்துடன் காற்று மாசும் மோசமடைந்துள்ளது. இதனால் இன்று காலை 9 ரெயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.