Tamilசெய்திகள்

டெல்லியில் நடைபெறும் புத்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலகளாவிய புத்த மாநாடு ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைமை பெளத்த துறவிகள், நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். புத்தரின் நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல், சிறந்த பௌத்த சிந்தனையாளர்களை ஒரே தளத்தில் கொண்டு வருதல் இந்த மாநாட்டின் நோக்கம்.

இந்த மாநாட்டில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு புத்த சின்னங்கள் உள்ள பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.