Tamilசெய்திகள்

டெல்லியில் தங்கியிருந்த நைஜீரியா பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு!

குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. முதல் முதலில் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருந்தது. அதன்பின் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் குரங்கம்மை பரவியது. குறிப்பாக டெல்லியில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எல்.என்.ஜெ.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குரங்கம்மை பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் டெல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 13 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.