இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 7 மக்களவை தொகுதி உள்ளன. இங்கு 6-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை.
அடுத்த மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 23-ந்தேதிதான் கடைசி நாள். இந்நிலையில் நாளைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
7 தொகுதிகளுக்கான கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசிய அவர், ‘‘அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை கட்சி தலைமை நாளைக்குள் அறிவிக்கும். நான் சாந்த்னி சவுக் தொகுதியில் போட்டியிட தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும்’’ என்றார்.
இதனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் டெல்லியில் தனித்தே போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.