Tamilசெய்திகள்

டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், கோவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக் கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.