டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் – இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றி

மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளவரும், முன்னாள் சாம்பியனுமான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் 52-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 12-21, 14-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டென்சனிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் இந்திய வீரரான சுபாங்கர் தேவ் 13-21, 8-21 என்ற நேர்செட்டில் கனடா வீரர் ஜாசன் அந்தோணியிடம் வீழ்ந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools