டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து தென் கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொண்டார்.
இதில் பிவி சிந்து 14-21, 17-21 என நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.