Tamilவிளையாட்டு

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறவில்லை – செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு

23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான 41 வயது செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) டென்னிசில் இருந்து ஒதுங்கி அடுத்தகட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தபோவதாக தெரிவித்து இருந்தார்.

சொந்த மண்ணில் கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிசில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். அத்துடன் அவர் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அந்த போட்டியின்போது ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர்மல்க விடைபெற்றார். இதனால் அது தான் அவரது கடைசி போட்டி என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தனது முதலீட்டு கம்பெனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செரீனா பேசுகையில், ‘நான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஓய்வு என்கிற வார்த்தை எனக்கு ஒருபோதும் பிடிக்காது. நான் மீண்டும் டென்னிஸ் களம் திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனது வீட்டுக்கு நீங்கள் வந்தால் டென்னிஸ் ஆடுகளம் இருப்பதை பார்க்கலாம்’ என்றார்.