X

டெத் ஓவரில் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி!

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 35 ரன், இஷான் கிஷன் 34 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களே எடுத்ததால், இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், டெத் ஓவர் என அழைக்கப்படும் கடைசி 5 ஓவரில் இந்தியா 86 ரன்கள் குவித்தது. இதுவே டி20 போட்டியில் கடைசி 5 ஓவரில் இந்தியாவின் அதிக ரன்கள் என்ற சாதனையை படைத்தது.

ஏற்கனவே, கடந்த 2007-ம் ஆண்டில் டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான் போட்டியில் இந்தியா 80 ரன்கள் எடுத்திருந்தது.