சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- “எல்லாரிடமும் பழகுங்கள் தெரிந்து கொள்ளுங்கள். யார்மேல் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாதீர்கள்.
இன்னைக்கு கோபப்பட்டவர்களை சண்டை போட்டவர்களை நான் காலத்திற்கு பின்னாடி சந்திக்கிறேன். அவன் நண்பனாக மாறுகிறான். எதையும் உடனே வெளிக்காட்டாதீர்கள் எல்லாவற்றிற்கும் நேரம் கொடுங்கள். இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களது நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது.
உங்கள் நேரத்தை எந்த விதத்தில் திருடிக் கொள்ளலாம். உங்கள் மூளையை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசிக்கிறது. உங்களுக்கு சுதந்திரம் தருவது போல் அது நடிக்கிறது. டெக்னாலஜி உங்களை திங்கப்பார்க்கிறது. உங்களை எப்படி ஆட்கொள்ளலாம் என்பதில் இந்த உலகம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது” இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.