Tamilவிளையாட்டு

டி20 போட்டியில் புதிய சாதனை படைத்த விராட் கோலி

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி 43 ரன்கள் எடுத்தார்.

10 ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் போட்டியில் 9 ஆயிரம் ரன்னை தொட்டு புதிய சாதனை படைத்தார். 286 போட்டியில் விளையாடி அவர் இந்த ரன்னை எடுத்துள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார். சர்வதேச அளவில் 7-வது வீரர் ஆவார். வி1ராட்கோலி 286 ஆட்டத்தில் 9 ஆயிரத்து 33 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 5,524 ரன் எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் ரோகித்சர்மா 5 ஆயிரம் ரன்னை எடுத்து ஐ.பி.எல்.லில் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் எடுத்த வீரர்கள் வருமாறு:-

1. கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)-13,296 ரன்

2. போல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்)- 10,370 ரன்

3. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)- 9926 ரன்

4. மெக்குல்லம் (நியூசி லாந்து)- 9922 ரன்

5. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)- 9451 ரன்

6. ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)- 9646 ரன்

7. வீராட்கோலி (இந்தியா) – 9033 ரன்