டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ரோகித் சர்மா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டானார். முன்னதாக ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார்.
ரோகித் சர்மா இதுவரை 133 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே கப்தில் (3,497 ரன்), விராட் கோலி (3,343 ரன்) ஆகியோர் உள்ளனர்.