டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்தார் அஸ்வின்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 36 வயதான அவர் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை வான்சுடே மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்றது.

இந்த ஆட்டத்தில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 27 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் அனைத்துவிதமான 20 ஓவர் போட்டிகளும் சேர்ந்து 300 விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை புரிந்தார். 300 விக்கெட் எடுத்த 2-வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார்.

ராஜஸ்தான் அணியின் சக வீரரான யசுவேந்திர சாஹல் ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 300 விக்கெட்டை தொட்டார். தற்போது அஸ்வினும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். சர்வதேச அளவில் 17-வது பந்துவீச்சாளர் ஆவார். சுழற்பந்து வீரர்களில் 9-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

அஸ்வின் ஐ.பி.எல். போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ளார். மலிங்கா, அமித் மிஸ்ரா, பியூஸ் சாவ்லா ஆகியோருடன் அஸ்வின் இணைந்தார். பிராவோ 183 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், சாஹல் 178 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools